திருவண்ணாமலை அருகே முலாம்பழம் பயிரிட்ட விவசாயிகள் கொரோனா வைரஸ் பாதிப்பால் இழப்பீட்டை சமாளிக்க ஏக்கருக்கு 50 ஆயிரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள சின்னியம்பேட்டை
முலாம் பழம் பயிரிட்டால் அதிக லாபம் கிடைக்கும் கொரோனா வைரஸ் எதிரொலியாக வெளி மாநிலத்திற்கு பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு
ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயிகள் நிறைந்த மாவட்டம் என கூறலாம் திருவண்ணாமலை மாவட்டம் சின்னியம்பேட்டை.வேப்பூர் .t.வேலூர் . ரெட்டியார்பாலையம் .மலையனூர் . மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமங்களில் பெரும்பாலும் முலாம்பழம் பயிரிட்டு வருகின்றனர். குறுகிய கால மகசூல்ஆகும் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் தொகை செலவில் முலாம்பழம் பயிரிட்டால் மூன்று மடங்கு லாபம் தரும் என்பதால் இதனை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முலாம்பழம் பயிரிட்டு வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருவது வழக்கம் தற்போது கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது .
இந்நிலையில் விவசாய நிலங்களில் பல ஏக்கரில் முலாம்பழம் பயிரிட்டு அறுவடை செய்யும் நேரத்தில் 144 தடை உத்தரவால் பல மாநிலத்தில் கொண்டு செல்லும் முலாம்பழம் ஏற்றுமதி செய்யமுடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர் மேலும் விவசாயிகள் பல லட்சம் நஷ்டமடைந்துள்ளனர் இதில் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது மேலும் இதுகுறித்து பேசிய விவசாயி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் சின்னையன் பேட்டை கிராமத்தை சுற்றி 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது இங்கு அனைத்துமே முலாம்பழம் பயிரிட்டு உள்ளோம் மேலும் இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் உள்ளதாகவும் இந்த முலாம்பழம் பயிரிட்டால் தண்ணீர் இல்லாமல் அறுபது நாட்களில் அறுவடை ஆகிவிடும் இதனால் எல்லோரும் முலாம்பழம் பயிரிட ஆர்வம் காட்டினோம் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் தொகை செலவாகிறது என்றும் மகசூல் ஒரு லட்சம் வரை கிடைக்கிறது குறுகிய காலத்தில் ஒரு லட்சம் கிடைப்பதால் விவசாயிகள் அனைவரும் முலாம்பழம் பயிர் இடுகிறோம் இரண்டு மாதமாக நல்ல மகசூல் என எதிர்பார்த்து இருந்ததாகவும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பழங்கள் நல்ல பழத்து அறுவடை ஆகும் நிலையில் எந்த ஒரு வியாபாரிகளும் வரவில்லை இதுகுறித்து தாசில்தாரிடம் கூறினாள் நாங்கள் ஒரு சர்டிபிகேட் கொடுக்கிறோம் அதை காண்பித்து உள்ளூரிலேயே விற்பனை செய்யுங்கள் என கூறினார் ஆனால் இந்த மாவட்டம் முழுவதும் விவசாயிகள் முலாம்பழம் தான் பயிரிட்டு உள்ளனர் வெளி மாவட்டத்தில் சென்றால் மட்டுமே முலாம்பழம் விற்பனை செய்ய முடியும் ஆனால் வெளி மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர்
மேலும் விவசாயி ஒருவர் லட்சக்கணக்கில் முதல் வைத்து பயிரிட்டுள்ளார்
வெளி மாநிலங்களுக்கு எடுத்து செல்ல முடியாததால் விவசாயிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் மாவட்ட நிர்வாகம் பரிதவிக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர் .