தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்றதால் காவல் துறையினர்

இதனால் போராட்டக்காரர்கள் சேப்பாக்கம் நோக்கித் திரும்பினர். தொடர்ந்து சேப்பாக்கத்தில் சாலை மறியல் போராட்டமாக அது மாறியது. இந்த போராட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மத்திய அரசை எதிர்த்தும், குடியுரிமைச் சட்டத் திருதத்தை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன காவல் துறையினர் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் யார் என்பது குறித்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து போராட்ட களத்தில் குழந்தைகளின் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைதான் என்பதற்கான ஆதாரங்களைக் கேட்டனர்.

முறையான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அந்த குழந்தைகளைப் போராட்ட களத்திலிருந்து வெளியேற அறிவுறுத்தினர். மேலும் காவல் துறையினர் அரசு குழந்தைகள் நல மைய அதிகாரிகளைப் போராட்டம் நடந்த இடத்திற்கு வரவழைத்து அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்தனர்.


Popular posts
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊராட்சி ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சியில் எந்த ஒரு வேலையும் சரிவர நடைபெறுவதில்லை
Image
உலகின் மிக அதிக விஷமுள்ள பாம்பு ஒன்றை தவளை விழுங்கியுள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அருகே முலாம்பழம் பயிரிட்ட விவசாயிகள் கொரோனா வைரஸ் பாதிப்பால் இழப்பீட்டை சமாளிக்க ஏக்கருக்கு 50 ஆயிரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Image
அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரூர் சார் ஆட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ
Image