குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய குழந்தைகளால் பரபரப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்றதால் காவல் துறையினர் அவர்களை வெளியேற்றச் செய்தனர்
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று சட்டத் திருதத்தை எதிர்த்தாலும், அதில் மாற்றம் கொண்டு வரப்போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாகத் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த காவல் துறை தலைமைச் செயலகம் செல்லும் பாதைகளில் தடுப்புகளை அமைத்தது.