சென்னை தெற்கு மாவட்ட திமுகவினர் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை:  தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று முதல் 20ம்தேதி வரை விருப்ப மனுக்களை கொடுக்கலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட திமுகவினர் தயாராகி வருகின்றனர். இன்று முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதை வாங்கி உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 53 வார்டுகளில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் இன்று காலை 10 மணி முதல் பெறப்படுகிறது. சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது'' என கூறியுள்ளார்.


Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊராட்சி ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சியில் எந்த ஒரு வேலையும் சரிவர நடைபெறுவதில்லை
Image
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Image
அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரூர் சார் ஆட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ
Image
எவ்வளவு பெரிய பலசாலியானாலும் பாம்பை கண்டால் அலறியடித்து ஓடுவார்கள். தவளை, எலி போன்றவற்றை பாம்புகள்
ஓய்வின்றி உழைக்கும் வண்டிச்சோலை ஊராட்சி மன்ற தலைவி
Image